திருச்சுழி,
திருச்சுழி குண்டாற்று பகுதியில் இருந்து 3 வயது உடைய புள்ளி மான் பள்ளி மடம் பகுதி ஆற்றுப்படுகையில் இறந்த நிலையில் கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வத்திராயிருப்பு வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் சென்று மானின் உடலை மீட்டு மிதலைக்குளம் உதவி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உதவிகால்நடை மருத்துவர் வளவன் புள்ளிமானுக்கு உடற்கூறு ஆய்வு செய்தார். இதையடுத்து மான் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.