சுரண்டை பள்ளியில் விளையாட்டு விழா

சுரண்டை பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

Update: 2023-09-22 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. குழல்வாய்மொழி அம்மாள் சிவன்நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஸ்ராம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சிவடிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா, தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) அ.பாலச்சந்தர் கலந்து கொண்டார். பள்ளியின் குழுக்களான சபையர், கோரல், எமரால்டு, ரூபி அணியினர் இதில் கலந்து கொண்டனர். மாணவர் பாலமுருகன் ஒலிம்பிக் தீபமேற்றினார். கோகோ, கைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, இறகுப்பந்து, ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 500 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம் நடந்தது. விளையாட்டுப் போட்டியில் சபையர் அணியினர் முதலிடமும், கோரல் அணியினர் 2-ம் இடமும், எமரால்டு அணியினர் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக் கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் கோபால் விளையாட்டு விழாவை ஒருங்கிணைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்