விளையாட்டு விழா

கள்ளக்குறிச்சி அருகே விளையாட்டு விழா

Update: 2023-02-19 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 நாள் விளையாட்டு விழா நடைபெற்றது. இதற்கு பாரதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் லட்சுமி கந்தசாமி தலைமை தாங்கினார். தாளாளர் கந்தசாமி, ஆக்ஷாலிஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் பரத்குமார், செயலாளர் சாந்தி பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுபா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதில் ஓட்டம், இறகு பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். போட்டியை உடற்கல்வி இயக்குனர்கள் அசோக்குமார், சாந்தி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினார்கள். இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்