விளையாட்டு விழா
சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார் தொடக்கப்பள்ளி, சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளிகளின் விளையாட்டு விழா நடந்தது. உடன்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். யூனியன் கவுன்சிலர் தங்கலெட்சுமி, பள்ளி நிர்வாக குழுத்தலைவர் சங்கரநாராயணன், பள்ளி பொருளாளர் வைகுண்டராமன், பள்ளி செயலர் ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்று பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே தனி, குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஆசிரியைகள் அழகுமணி, சுப்புலெட்சுமி, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.