கள்ளக்குறிச்சியில்முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-10 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியானது, வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

கபடி போட்டி

இதில் முதல்நாளான நேற்று பள்ளி மாணவர்களுக்கு கபடி, கையுந்து பந்து, இறகு பந்து (ஒற்றையர், இரட்டையர்), நீச்சல், கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நீச்சல், மேசைப்பந்து போட்டிகளும், பொதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கு மேசைபந்து போட்டிகளும் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 706 பேர் கலந்து கொண்டு விளையாடினார்கள். இப்போட்டியை பள்ளிக்கல்வித் துறை மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி விளையாட்டு கழக ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்