விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தேர்வு

விளையாட்டு போட்டிகளில் தமிழக அணி சார்பில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் தேர்வு சென்னையில் வருகிற 13 மற்றும் 14-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-12-09 18:45 GMT

விளையாட்டு போட்டிகளில் தமிழக அணி சார்பில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் தேர்வு சென்னையில் வருகிற 13 மற்றும் 14-ந் தேதி நடக்கிறது.

விளையாட்டு போட்டி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் வரை நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக அணிக்கு விளையாட வருகிற 13 மற்றும் 14-ந் தேதி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கூடை பந்து போட்டிக்கு மாணவ மற்றும் மாணவிகள் தலா 12 பேரும், கால்பந்து போட்டிக்கு 20 மாணவர்களும், ஆக்கி போட்டிக்கு 18 மாணவிகளும், கோ-கோ போட்டிக்கு 15 மாணவிகளும், வாலிபால் போட்டிக்கு மாணவர் மற்றும் மாணவிகள் தலா 14 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உரிய ஆவணங்கள்

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2004-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள வரும்பொழுது ஆதார் கார்டு அல்லது பள்ளியில் படிப்பதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை கொண்டு வர வேண்டும்.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு நடைபெறும் நாள் அன்று உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்