கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சிவகங்கை நடைபெற்ற வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள் மற்றும் சாயம் பூசப்பட்ட உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2023-06-14 19:07 GMT


சிவகங்கை நடைபெற்ற வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள் மற்றும் சாயம் பூசப்பட்ட உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

சோதனை

சிவகங்கையில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் சாயம் பூசப்பட்ட பட்டாணி, அப்பளம் மற்றும் கெட்டுப்போன மீன்கள் ஆகியவைகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று சிவகங்கையில் நடைபெற்ற வாரச்சந்தையில் திடீர் சோதனை செய்தனர்

மேலும் அவர்கள் மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆய்வக வசதி கொண்ட பரிசோதனை வேன் மூலமாக சந்தையில் விற்கப்பட்ட பட்டாணி மற்றும் அப்பளம் ஆகியவைகளை ஆய்வு செய்தனர். அதில் அவை ரசாயன சாயம் பூசப்பட்டது தெரிந்தது.

பறிமுதல்

இதைதொடர்ந்து அங்கிருந்து 30 கிலோ சாயம் பூசப்பட்ட பட்டாணி, 4 கிலோ கலர் அப்பளம் ஆகியைவகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் அங்குள்ள மீன் விற்பனை செய்யும் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து அங்கு இருந்த மீன் விற்பனை கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது ராமேசுவரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன்களில் 5 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று அதிகாரிகள் மீன் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தனர். அத்துடன் ஒருவருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்கள் மற்றும் சாயம் பூசப்பட்ட பட்டாணி மற்றும் அப்பளம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்