வேகத்தடைக்கு வர்ணம் பூசப்பட்டது
நாகூர் - நாகை சாலையில் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்பட்டது
நாகூர் :
நாகூரில் இருந்து நாகை வரை விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டது .வேகத்தடை அமைக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை வர்ணம் பூசாமல் இருந்து வந்தது. இதனால் இரவில் இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கின. இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதன் விளைவாக வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டு உள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.