பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

நாமக்கல்லில் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 18-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டா் உமா தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-09 18:45 GMT

பேச்சுப்போட்டி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 18-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

பரிசு

காஞ்சித் தலைவன், அண்ணாவும், பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பின்னர் பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்