சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி‌ அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது .;

Update:2024-04-28 22:04 IST

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி சிலை உள்ளது . பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்திக் கொடுக்கும் வல்லவராக திகழ்வதால் இந்த ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம் .அதன்படி நேற்று மூலம் நட்சத்திரத்தை யொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது .

இதையொட்டி பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெற்றிலை மாலை ,துளசி மாலை, வடைமாலை ,வெண்ணெய் சார்த்தி தங்களது பெயர்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தினர். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுசீந்திரத்தில் அலை மோதியது .ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்