முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல்லில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி வள்ளி-தெய்வானை, முருகப்பெருமானுக்கு காலை 11 மணியளவில் பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
----