தெருக்களில் இறுதி ஊர்வலம் செல்வதற்கு தடை கோரி வழக்கு; அபராதம் விதித்த மதுரை ஐகோர்ட்டு கிளை
தெருக்களில் இறுதி ஊர்வலம் செல்வதற்கு தடை கோரிய வழக்கில் மனுதாரருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை அபராதம் விதித்துள்ளது.;
மதுரை,
இறுதி ஊர்வலத்தின்போது தெருக்களை பயன்படுத்தாமல், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தாத வகையில் பிரதான சாலையை பயன்படுத்தி மயான பூமிக்கு செல்ல உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பஞ்சாயத்துக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் போன்றவற்றை வேறுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தலாம் என்றும், அதில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் எந்த வித உரிமையும் இருக்க முடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.