சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
நாகை அருகே சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்றுமுன்தினம் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.