ஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
ஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றார்.
சிறப்பு கிராமசபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை 2023-2024 ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், அந்தியோதயா இயக்க கணக்கெடுப்பு தரவுகள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டக்குழு அமைக்கப்பட்டதற்கு ஒப்புதல் பெறும் பொருட்டு நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினார். ஊராட்சி மன்ற தலைவர் கவுதமன், துணை தலைவர் இந்துகுமார் முன்னிலை வகித்தனர்.
அவருடன் மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, செங்கல்பட்டு தாசில்தார் நடராஜன், அரசு அலுவலர்கள், மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
இதுபோல திம்மாவரம் ஊராட்சியில் தலைவர் நீலமேகம், துணை தலைவர் கவியரசன், குன்னவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா துணை தலைவர் அன்னம்மாள் தலைமையிலும் நடந்தது.
புலிப்பாக்கம் ஊராட்சி
வீராபுரம் ஊராட்சியில் தலைவர் டில்லி, துணை தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், ஆப்பூர் ஊராட்சியில் தலைவர் குமாரசாமி, துணை தலைவர் கேசவன், ஆலப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பரிமளா ஜெய்சங்கர், துணை தலைவர் சத்யா கோபி, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் அரிபாபு பங்கேற்றனர்.
புலிப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் நிர்மலா அசோகன், துணை தலைவர் குமரேசன், ரெட்டிபாளையம் ஊராட்சியில் தலைவர் சந்தியா செந்தில், துணை தலைவர் சந்தானம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தலைவர் விஜயலட்சுமி துரைபாபு, துணை தலைவர் கே.பி.ராஜன், அஞ்சூர் ஊராட்சியில் தலைவர் செல்வி தேவராஜன், துணை தலைவர் நித்யானந்தம், வார்டு உறுப்பினர் உமா கனேஷ், வெங்கிடாபுரம் ஊராட்சியில் தலைவர் பாலாஜி, துணை தலைவர் ஸ்ரீதர், வார்டு உறுப்பினர் மகேஸ்வரி ஏழுமலை, மேலமையூர் ஊராட்சியில் தலைவர் ஹெலன் சிந்தியா சரவணன், துணை தலைவர் நீலா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.