நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை-பக்தர்களுக்கு அன்னதானம்

ஆரணியில் பல்வேறு கோவில்களில் நரசிம்மர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-05-04 09:28 GMT

ஆரணி

ஆரணியில் பல்வேறு கோவில்களில் நரசிம்மர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி கொசப்பாளையம் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் நரசிம்மர் ஜெயந்தி விழா நடந்தது. இதனையொட்டி சக்கரத்தாழ்வாருடன் உள்ள நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி, மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் சைதாப்பேட்டை நாடக சாலை பேட்டை தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் சன்னதியில் நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு சாமிக்கு மகா அபிஷேகம் நடத்தி மகா அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் தூணில் அமைந்துள்ளயோக நரசிம்மருக்கு நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடத்தி தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்