திரவுபதியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
வடலூர் திரவுபதியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வடலூர்,
வடலூர் கருங்குழியில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து பவழக்காளி நடனம், சிலம்பாட்டம் மற்றும் தர்மராஜா பட்டாபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.