கடலூா் மாவட்டத்தில்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகளுக்கு தீர்வு

கடலூா் மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2023-03-11 18:45 GMT


கடலூர் நீதிமன்றத்தில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் (மோட்டார் வாகன விபத்து வழக்குகள்) நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் லிங்கம், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி மோகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

235 வழக்குகளுக்கு தீர்வு

இதில் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமநாதன், செயலாளர் ராம்சிங் மற்றும் வக்கீல்கள், போலீஸ் நிலைய அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய நீதிமன்றங்களிலும் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 543 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 235 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.10 கோடியே 57 லட்சத்து 59 ஆயிரத்து 492 வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்