சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாம்
சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாமில் அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
ஆம்பூர்
ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த், அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், அமலு விஜயன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் நகர மன்றத் தலைவர் ஏஜாஸ் அகமத், ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான எம்.ஆர்.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சசிகலா சாந்தகுமார் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.