தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள்... மழைக்கால நோய்களை தடுக்க நடவடிக்கை
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
சென்னை,
தமிழகம் முழுவதும் மூன்றாயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மிக்ஜம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
சென்னை சைதாப்பேட்டையில் இந்த சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மலேரியா, டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்தவே மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.