சிறப்பு மருத்துவ முகாம்

சாணார்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.;

Update:2023-06-08 00:30 IST
சிறப்பு மருத்துவ முகாம்

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் நல்லேந்திரன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சாணார்பட்டி வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் பரிசோதனைகளும், அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில் டாக்டர்கள் மோகன்ராஜ், பிரியா, முகமதுவாசிம் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சேகர், ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்