சிறப்பு மருத்துவ முகாம்
கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு முதன்மை மருத்துவ அலுவலர் வித்யாமுருகன் தலைமை தாங்கினார். முகாமில் குழந்தைகள் நலம், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், பல், சித்தா, தொற்றா நோய் கண்டறிதல், கர்பபை வாய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறிதல், காசநோய், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் 300 பேர் பயன் அடைந்தனர். இதில் டாக்டர்கள் சண்முக பிரியதர்ஷினி, பிரவீன்குமார், சிவகாமி, சோபிகா, செவிலியர் கண்காணிப்பாளர் கீதா, செவிலியர் சஜினாகாசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.