காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

நாமக்கல்லில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-03-10 18:45 GMT

காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரபாகரன் உத்தரவின்பேரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், 3-வது வார்டு கவுன்சிலர் சசிகலா சவுந்திரபாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார்.

இதில் டாக்டர் நாகராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு காய்ச்சல், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை ஆகிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. அதேபோல் நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

13 இடங்களில் முகாம்

இதேபோல் ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் டாக்டர் சிவா தலைமையிலான குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதில் நகராட்சி துணைத் தலைவர் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார்.

நாமக்கல் வட்டாரத்தில் 13 இடங்களில் நடைபெற்ற முகாம்களில 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 150 பொதுமக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்