சமயபுரத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சித்திரை ஞாயிற்றுக்கிழமையையொட்டி சமயபுரத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ணமலர்கள் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.