குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள், 9-ந் தேதி நடக்கிறது

Update: 2022-11-29 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களில் முன்னுரிமையற்ற குடும்ப(என்.பி.எச்.எச்.) அட்டைதாரர்கள் தங்களை மீளவும் முன்னுரிமை குடும்ப (பி.எச்.எச்.) அட்டைதாரராகவும், அந்தியோதியா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்.) அட்டைதாரராகவும் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.

இதற்காக நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மற்றும் 9-ந் தேதி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்க சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதியா அன்னயோஜனா அட்டைதாரராக மாற்றம் செய்யக்கோரும் மனுவை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கலாம். முகாமில் பெறப்படும் மனுக்களின்பேரில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் விசாரணை செய்யப்பட்டு தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த நல்ல வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திகொண்டு குறைகளை தீர்வு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்