கிறிஸ்துமஸ் பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்,
"கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) மூலம் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 640 சிறப்பு பேருந்துகளை அடுத்த இரு நாட்களுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பயணிகள், www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி ஆகியவற்றின் வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.