நவராத்திரி 2-ம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

நவராத்திரி 2-ம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-09-27 18:45 GMT

கரூர் மாவட்டம், நஞ்சைபுகழூர் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்கா தேவி சரஸ்வதிக்கு நவராத்திரி 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில்அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்கா தேவி சரஸ்வதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நஞ்சை புகழூர் அக்ரஹாரம், தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், புன்னம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதேபோல் அப்பகுதியில் கோவில் வளாகத்தில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு காலை, மாலை 2 வேளையும் பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்