வீரமாத்தி அம்மன் கோவிலில் 7 கன்னிமார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

வீரமாத்தி அம்மன் கோவிலில் 7 கன்னிமார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-16 18:35 GMT

 பசுபதிபாளையம் பகுதியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 7 கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி,கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சாமிகளை வைத்து முன்னோர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலில் 7 கன்னிமார்களுக்கு நேற்று பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் 7 கன்னிமார்களும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு மகாலட்சுமி, சுதர்சனம் நவக்கிரக ஹோமங்கள் மற்றும் 96 வகையான திரவியங்களால் சன்னதி ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்