தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில்பாதையில் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேகுமார்ராய் ஆய்வு மேற்கொண்டார். இன்று(சனிக்கிழமை) சோதனை ஓட்டம் நடக்கிறது.
ஆய்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி வரை மீட்டர் கேஜ் ெரயில் பாதை அகல ெரயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது. அப்போது ரூ.288 கோடி மதிப்பில் 79 பாலங்கள் மற்றும் 13 ெரயில்வே கேட் அமைக்கும் பணிகளும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் அனைத்து நிறைவடைந்துள்ளது. முதற்கட்டமாக கடந்த மாதம் அதிவேக ெரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேற்று இரண்டாம் கட்டமாக அகல ரெயில்பாதையில் தென் மண்டல ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேகுமார் ராய், திருச்சி ேகாட்ட ெரயில்வே இயக்க மேலாளர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் 8 மோட்டார் டிராலி மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனை ஓட்டம்
ஆய்வின்போது இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக ெரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ெரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டாம். மேலும் தங்கள் கால்நடைகளை ெரயில்வே தண்டவாளம் பகுதிக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது தென் மண்டல ெரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் காரைக்குடியில் இருந்து சென்னை வரை கம்பன் ெரயிலை இயக்க வேண்டும். வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு ெரயில் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ெரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்து ெரயில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.