தென்மண்டல வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
தென்மண்டல வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கோவில்பட்டி கவுனியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்மண்டல வினாடி- வினா போட்டி நடந்தது. போட்டிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கோ. பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வினாடி- வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் எஸ். தினகரன், மாநில செயலாளர் எஸ். பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பாண்டித்துரை நன்றி கூறினார்.