பல்லக்கில் புறப்பட்ட சவுந்தரராஜ பெருமாள்

வடமதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரதராஜ பெருமாள் பல்லக்கில் புறப்பட்டார்.

Update: 2023-04-05 16:42 GMT

வடமதுரை சவுந்தரராஜ பெருமாளின் 102-ம் ஆண்டு பங்குனி திருவிழா, திண்டுக்கல் நாகல்நகரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று காலை பெருமாளுக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் ராஜ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, பல்லக்கில் திண்டுக்கல்லுக்கு புறப்பாடு ஆனார். அதனைத்தொடர்ந்து முள்ளிப்பாடியில் நேற்று இரவு தங்கினார்.

இன்று (வியாழக்கிழமை) முள்ளிப்பாடி சந்தானவர்தினி நதியில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்து, இரவு புஷ்ப விமானத்தில் பெருமாள் புறப்பாடாகி திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டியில் தங்குகிறார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பாடாகி திண்டுக்கல் நாகல்நகர், பாரதிபுரம், என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் குதிரை மற்றும் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

அதன்பின்னர் ஏப்ரல் 12-ந்தேதி என்.ஜி.ஓ. காலனியில் இருந்து கள்ளர் வேடம் தரித்து, புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகி மறுநாள் சன்னதியை வந்தடைகிறார். இந்த பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விஸ்வநாத், செயல் அலுவலர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்