விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-16 06:29 GMT


சென்னை,

மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அதன் பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாற்றப்பட்டுள்ளது. 95.96 % முதல் தவணை தடுப்பூசியும், 89.44 % பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

டெங்கு, மலேரியா டைபாய்டு உள்ளிட்ட மழைக்கால நோய்களால் 2017 ல் தான் அதிகபடியானவர்கள் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் 10,136 பேர் தமிழகத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

85 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் பெற்று இருக்கிறார்கள்,

1.5 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்.

25 ஆரம்ப சுகாதார நிலையம், 25 சுகாதார நிலைய ம் என மொத்தமாக 50 சுகாதார நிலையங்கள் அமைய உள்ளன. அதற்கான அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் வெளியிட இருக்கிறார்.

தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தால் தற்போது 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. மிக விரைவில் தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்