தந்தையை தாக்கிய மகன் கைது

நெல்லை அருகே தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-09 23:37 GMT

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் இத்திகுளம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 54). மின்வாரிய ஓய்வு பெற்ற ஊழியர். இவருடைய மகன் கண்ணனுக்கு, உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதையொட்டி நேற்று காலை முருகன் சமாதானம் பேசுவதற்காக கண்ணனிடம் சென்று உள்ளார். அப்போது கண்ணன், முருகனை அவதூறாக பேசி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்