திமுக அரசின் நல்லாட்சியை கொச்சைபடுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள் - சபாநாயகர் அப்பாவு பேச்சு

திமுக அரசின் நல்லாட்சியை கொச்சைபடுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2022-10-02 08:25 GMT

நெல்லை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சபாநயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

கிராமசபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைப்பெறுகிறது. ஆனால் காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது.

10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட துவங்கியது.

திமுக அரசின் நல்லாட்சியை கொச்சைபடுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அரசின் நல்ல திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்கள் பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்