திடக்கழிவு மேலாண்மை திட்டம்

திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

Update: 2023-08-15 19:13 GMT

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பொது இடத்தில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் தற்போது கொத்தனார் காலனி அருகே மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மக்கும் குப்பைக்கு ஒரு பகுதியும், மக்காத குப்பைக்கு ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு உரமாக வழங்கப்படுகிறது. அதேபோல் மக்காத குப்பைகள் அனைத்தும் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்