இன்று சூரிய கிரகணம் - தமிழகத்தில் எப்போது தெரியும்?

இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழவுள்ளது.

Update: 2022-10-25 03:45 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இன்று நிகழவுள்ள சூரிய கிரகணம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதியளவு சூரியகிரகணம் இன்று ஏற்பட உள்ளது. இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழவுள்ளது.

குஜராத்தின் துவாரகா நகரில் அதிகபட்சமாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், சென்னையில் சூரிய கிரகணம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும், குறைந்தபட்சமாக கொல்கத்தாவில் 12 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்