சோலையாறு அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்ந்தது

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 127 அடியாக உயர்ந்து உள்ளது.

Update: 2023-07-28 19:30 GMT
வால்பாறை


வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 127 அடியாக உயர்ந்து உள்ளது.


தென்மேற்கு பருவமழை


வால்பாறையில் தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக சோலை யாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.


நேற்று முன்தினம் காலை முதல் வால்பாறை பகுதியில் மழை குறைந்து விட்டது. இதனால் சோலையாறு சுங்கம் ஆறு, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து உள்ளது. மேலும் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 127 அடியை தாண்டியது.


மழையளவு


மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு 1437 கன அடி தண்ணீரும், கீழ் நீராறு அணையில் இருந்து 174 கன அடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2293 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டு இருக்கிறது.


பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ) வருமாறு:-


சோலையார் அணை- 10, பரம்பிக்குளம்- 3, வால்பாறை-5, அப்பர் நீராறு-12, லோயர் நீராறு-10, சர்க்கார்பதி -1, வேட்டைக்காரன் புதூர்-2.8, மணக்கடவு-2, தூணக்கடவு-2, நவமலை-1, பொள்ளாச்சி-6.


சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள் ளது. இதனால் சோலையார் மின் நிலையங்களில் மின் உற்பத்தி யை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரோட்டில் சாய்ந்த மரம்


வடசித்தூரில் இருந்து குருநல்லிபாளையம் வழியாக செல்லும் சாலையை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென்று கருவேலமரம் சாய்ந்து உள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதை அகற்ற ஊராட்சி மன்ற நிர்வாகம் அல்லது நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் செய்திகள்