பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி.சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.