சோலைமலை முருகன் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சிறப்பு வழிபாடு

சோலைமலை முருகன் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்

Update: 2023-06-07 20:16 GMT

அழகர்கோவில்

மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை மீது முருகப்பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை முருகன், மற்றும் ராக்காயி அம்மன் கோவில் உள்ளன.

மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், 18-ம்படி கருப்பணசாமி கோவிலும் உள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஜப்பான் நாட்டை சேர்ந்த ெபண்கள் உள்பட அந்நாட்டினர் 40 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் நேற்று அழகர்கோவிலுக்கு வந்திருந்தனர்.

மலை மீதுள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு ெசன்றனர். வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், வேல்சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்கு தரிசனம் செய்தனர். ஜப்பானை சேர்ந்தவர்கள், தேங்காய், பழம், பூ உள்ளிட்டவற்றை வாங்கி வந்து சாமிக்கு படைத்தும் வழிபட்டனர். கள்ளழகர் கோவில் கட்டிடக்கலையையும், சுவரில் வரையப்பட்ட ஓவியங்களையும், சிலைகளையும் பார்த்து வியந்தனர். முன்னதாக ஜப்பான் நாட்டினரை கோவில் துணை ஆணையர் ராமசாமி, கோவில் பணியாளர்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்