மண் சேகரிப்பு நிகழ்ச்சி

மண் சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-04 18:15 GMT

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, நாடு முழுவதும் அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அமுத பெருவிழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை வருங்கால சந்ததிகள் அறிந்து நினைவு கூறும் வகையில் தலைநகர் டெல்லியில் 75-வது நினைவு சுதந்திர பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு அமையும் பூங்காவிற்கு நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் மண் எடுத்து வரப்பட்டு நினைவு சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கரூர் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்கள் மூலம் ஒவ்வொரு கிராமங்களில் இருந்து மண் சேகரிக்கப்பட்டு கரூர் தலைமை அஞ்சலகத்திற்கு கொண்டு வந்து ஒன்றாக கலந்து பின்னர் டெல்லியில் அமைய உள்ள சுதந்திர பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் ஒரு அங்கமாக கரூர் காணியாளம்பட்டியில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மண் சேகரிக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அஞ்சல் ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்