நாமக்கல்லில் பள்ளி மாணவிகளுக்கான பூப்பந்து போட்டி
நாமக்கல்லில் பள்ளி மாணவிகளுக்கான பூப்பந்து போட்டி
நாமக்கல் வட்டாரத்திற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாரதியார் தின மற்றும் குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கபடி உள்பட 12 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான பூப்பந்து போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெறும் அணியினர் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தெரிவித்தார்.