வேடசந்தூர் அருகே கோவிலுக்குள் புகுந்த நாகபாம்பு பிடிபட்டது
வேடசந்தூர் அருகே கோவிலுக்குள் புகுந்த நாகபாம்பு பிடிபட்டது.
வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று இவர், மின்மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றார். அப்போது அந்த அறைக்குள் பாம்பு ஒன்று சீறி கொண்டிருந்தது. இதனைக்கண்ட ராஜேந்திரன், அலறியடித்து அங்கிருந்து வெளியே ஓடி வந்தார்.
பின்னர் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அந்த பாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர். அது, நாகபாம்பு ஆகும். சுமார் 6 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை தீயணைப்பு படையினர் அங்குள்ள வனப்பகுதியில் விட்டனர்.