பாறைகளை உடைத்து கடத்தல்; டிரைவர் கைது

பாறைகளை உடைத்து கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-27 19:49 GMT

களியக்காவிளை, 

பாறைகளை உடைத்து கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பாறை கடத்தல்

களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குழித்துறை பழவார் மற்றும் படந்தாலுமூடு பகுதியில் பாறையை உடைத்து வாகனங்களில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு பாறைகளை துளைபோடும் எந்திரம் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுனரான குளப்புறம் ஜோன்தாஸ் என்பவரை கைது செய்தனர். பழவாரை சேர்ந்த அனில்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்