புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-01-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை சார்பில் பயணிகள் விடுதி முன்பிருந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை நகரசபை தலைவர் கா.கருணாநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார அதிகாரி நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் வள்ளி ராஜ், காஜா நஜிமுதீன், முருகன், நகரசபை கவுன்சிலர்கள் தவமணி, சுதாகுமாரி, மணிமாலா, சித்திரா மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி மெயின் ரோடு, பார்க் ரோடு வழியாக நகர சபை அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்