அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தில் சிறு தானியங்களையும் சேர்க்க வேண்டும்

அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தில் சிறு தானியங்களையும் சேர்க்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-09-15 18:44 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்.

5 வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்