சிறுதானிய கண்காட்சி

திருப்பத்தூரில் சிறுதானிய கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-27 18:07 GMT

சர்வதேச சிறுதானிய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய கண்காட்சி நடந்தது. இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் வாசுதேவரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்காட்சியில் சிறுதானியத்தின் பயன்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் சிறுதானியம் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் பச்சையப்பன், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலர் அப்துல் ரஹிமான் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள், வேளாண் கல்லுாரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்