அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி

அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.;

Update:2023-10-22 22:57 IST

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமாவதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்று பேசினார். கண்காட்சியில் கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி, வரகு, சாமை, தினை ஆகியவற்றைக் கொண்டு சுமார் 160 படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர். முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் ஷகிலாபானு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்