படிக்கும்போது மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்

அவினாசியில் வேலைவாய்ப்பு முகாம்: படிக்கும்போது மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் அமைச்சர் மு.ெப.சாமிநாதன்

Update: 2023-08-05 13:57 GMT

அவினாசி,

படிக்கும்போதே மாணவர்கள் திறனை வளர்த்துக்ெகாள்ள வேண்டும் என்று அவினாசியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் மு.ெப.சாமிநாதன் கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடந்தது. முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். படித்துவிட்டு வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் புதிய தொழில்களை உருவாக்கி அதன் மூலமாக வேலை வாய்ப்பு உருவாக்க முடியும். அந்த வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கல்லூரியில் படிக்கும் போதே திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் திறனை மேம்படுத்த நான் முதல்வன் என்கிற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வெளிநாட்டில் இருந்து தொழிலையும் இங்கு வர வைக்க வேண்டும். அதே நேரத்தில் இருக்கக்கூடிய தொழிலையும் மேம்படுத்தி புதிய தொழிலை உருவாக்க வேண்டும்.

தொழில்கள் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டம் திருப்பூர். அந்நிய செலவாணியில் முக்கிய பங்கு வகுக்கக் கூடியதும் பின்னலாடை துறையில் இந்தியாவிலேயே பெருமை சேர்க்கக்கூடிய வகையில் நமது மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப மையம்

தற்போது கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கலைஞரின் நூற்றாண்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் நிறுவனமான டாட்டா நிறுவனத்தின் மூலம் உடுமலை மற்றும் தாராபுரம் பயிற்சி நிலையத்தில் ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள் பெறுபவர்கள் உங்கள் வாழ்வில் சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

மேலும் செய்திகள்