திறன் மேம்பாட்டு மையம் தொடக்க விழா
பள்ளத்தூரில் பள்ளி குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு மையம் தொடக்க விழா நடைபெற்றது.
காரைக்குடி
பள்ளத்தூரில் பள்ளி குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு மையம் தொடக்க விழா நடைபெற்றது. முத்துசெட்டியார் தலைமை தாங்கினார். மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் குருமூர்த்தி கலந்துகொண்டார். பள்ளத்தூர் பேரூராட்சி தலைவர் சாந்திசங்கர், வடகுடி ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், முத்தையா, முருகப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நாகேஸ்வரி வரவேற்றார். இந்த பயிற்சி மையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சிலம்பம், இறகுபந்து, யோகா, பரதநாட்டியம், ஓவியம், பேச்சுத்திறமை, பொது அறிவு, சதுரங்கம், நீச்சல் பயிற்சி, இசை, தமிழ் பேச்சு, கலை திறன் மேம்பாடு மற்றும் கலாசாரம் ஆகியவை கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.