ஆயுதபூஜையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை உயர்வு

ஆயுதபூஜையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை உயா்ந்தது.

Update: 2023-10-17 20:58 GMT

ஆயுதபூஜையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை உயர்ந்தது.

விலை உயர்வு

எலுமிச்சை பழம் சமையலுக்கு மட்டுமின்றி கோவில்கள், வீடுகளில் ஆன்மிக வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எலுமிச்சை பழத்தின் தேவையும் அதிகமாக உள்ளது. ஆயுதபூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் எலுமிச்சை பழத்தின் விலை உயர தொடங்கியது.

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.160 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையிலும் ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையாகிறது.

வரத்து குறைவு

இதுகுறித்து எலுமிச்சை பழ வியாபாரி கார்த்தி கூறியதாவது:-

ஈரோட்டுக்கு தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே எலுமிச்சை பழத்தின் வரத்து குறைவாக உள்ளது. அதனால் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.50 வரை விலை உயர்ந்து உள்ளது. ஆயுதபூஜையை முன்னிட்டு எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து உள்ளது. அதன் காரணமாகவும் விலை உயர்ந்து விற்பனையாகிறது. பெரிய அளவுடைய ஒரு எலுமிச்சை பழத்தை ரூ.10-க்கு தான் நாங்களே கொள்முதல் செய்கிறோம். ஆயுதபூஜை முடிந்த பிறகு விலை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்