மீன்பிடி தொழிலாளர்கள் பேரணிக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம்

மீன்பிடி தொழிலாளர்கள் பேரணிக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் நடந்தது.;

Update:2023-02-20 00:30 IST

டெல்லியில் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி மீன்பிடி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு நாகை அருகே காமேஸ்வரம் கடற்கரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமான மீனவ பெண்கள் ஆர்வமுடன் கையெழுத்து போட்டனர். இதேபோல் நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழிலாளர்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. நிகழ்ச்சிக்கு மீன்பிடி தொழிலாளர்களின் கூட்டமைப்பு சங்க மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் காளியப்பன் வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

Tags:    

மேலும் செய்திகள்